சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே லாக்காடன் பகுதியில் சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து நிகழ்ந்த பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பல ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்று பாதையில் திரும்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.