Rock Fort Times
Online News

விஜய்க்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவு…!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆட்சியில் பங்கு கொடுப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்து இருந்தாலும் அந்த கட்சியில் இதுவரை யாரும் சேரவில்லை. மாறாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் அமைச்சராக பதவி வகித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கடைசியாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால், ஓபிஎஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காததால் அங்கிருந்து விலகி எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அவர் எந்த கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரனின் கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் அதிமுக பொதுச்செயலாளர் ரஞ்சித்குமார் கூறுகையில், 2026ல் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும். ஊழல் இல்லாத கட்சி என்பதற்காகவே விஜய்யை ஆதரிகிறோம்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்