Rock Fort Times
Online News

தஞ்சாவூர் -பழனி இடையே பங்குனி உத்திர சிறப்பு ரயில்!

பழனியில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ,தென்னக ரயில்வே தஞ்சாவூரில் இருந்து பழனிக்கு 5ஆம் தேதியும் ஆறாம் தேதியும் பங்குனி உத்திர சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி இன்றும் நாளையும் (5,6ம் தேதி)மதியம் இரண்டு மணிக்கு பழனியில் இருந்து புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல் ,மணப்பாறை வழியாக திருச்சிக்கு மாலை 6:15 மணிக்கு வந்து சேர்கிறது.திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருவரம்பூர் பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு மாலை 6:15 மணிக்கு சென்றடைகிறது . மறு மார்க்கத்தில் 6ம் தேதி நாளை தஞ்சாவூரில் காலை 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு 10:30 மணிக்கு வந்து மணப்பாறை திண்டுக்கல் வழியாக பழனிக்கு மதியம் 1:30 மணிக்கு சென்றடைகிறது. இத்தகவலை தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்