திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 58). இவர் மேலரசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.
இவர் நேற்று முன்தினம் மேலரசூரில் இருந்து திருச்சிக்கு தனது மொபட்டில் கல்லக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது லால்குடி ஒன்றியம் நெய்குப்பை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெயகுமார்(53), அவரது மகன் ஜெயநித்தீஸ் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட கல்லக் குடியை அடுத்த மால்வாய் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில்,அர்ச்சுணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அர்ச்சுணன் மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அர்ச்சுணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.