Rock Fort Times
Online News

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு “சீல்” வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு- தமிழ்நாடு அரசு…!

கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதி சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக அள ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்