ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் (ஏப்.6) நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலத்தை பிரதமர் திறக்க இருப்பதை ஒட்டி அங்குள்ள மேம்பாலம் வண்ண ஒளிகளில் ஜொலிக்கும் வீடியோ தற்போது சோசீயல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Comments are closed.