கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காஷ்மீரின் பகல்ஹாம் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்நிகழ்வு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர் நடவடிக்கையாக பாகிஸ்தானும் தங்களது நாட்டின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு ரத்து, மற்றும் சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்கி இருந்தது. இந்நிலையில், தற்போது இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டை தொடங்கியுள்ளது. இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments are closed.