வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு:- திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது…!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் இன்று(13-04-2025) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கட்சி நிர்வாகிகள் பாலக்கரை பகுதியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லாத காரணத்தால் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், மாநில நிர்வாகி ராஜேஷ் உட்பட 60 பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்று அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மாலை அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Comments are closed.