நீதிமன்றங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இ -பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெறக் கோரியும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி நீதிமன்ற நுழைவாயில் முன்பு இன்று (டிச.17) வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் சி.முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் . ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செயல்படாத பழைய கணிப்பொறியை கீழே போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Comments are closed.