திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 01.07.2025 முதல் இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 01.07-2025 முதல் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதேபோன்று, மலையிடப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.
கூடுதல், விவரங்களுக்கு இணை இயக்குநர் (மு.கூ.பொ), உதவி இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், காஜாமலை மெயின் ரோடு, காஜாமலை, திருச்சி – 620 023 என்ற முகவரியிலும், 0431-2420838 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.