திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள சக்தி ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்றது இதில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இறுதியாக உண்டியல்களிலிருந்து ரொக்கமாக ரூ. 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 946, 2 ஆயிரத்து 110 கிராம் தங்கம், 2, ஆயிரத்து 696 கிராம் வெள்ளி, 132 வெளிநாட்டு கரண்சிகள், 648 வெளிநாட்டு நாணயங்கள், ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.