திருச்சி கிழக்கு எம்எல்ஏ அலுவலகத்தில் இ சேவை மையத்தை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தமிழகத்திலேயே முதன்முதலாக இந்த அலுவலகத்தில் புதிதாக இ சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று ( 15.05.2023 ) நடைபெற்றது. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர் சாதிக், ஆர்டிஓ தவச்செல்வம் தாசில்தார் கனகமாணிக்கம், திமுக பகுதி செயலாளர்கள் மெடிக்கல் மோகன், டி.பி.எஸ்.எஸ் ராஜ முகமது, மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார், அயலக அணி அமைப்பாளர் அலெக்ஸ் ராஜா, வட்ட செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.