Rock Fort Times
Online News

கட்சி நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம், வேறு யாருக்கும் இல்லை- டாக்டர் ராமதாஸ் காட்டம்…!

”பா.ம.க., நிர்வாகிகளை நீக்க எனக்கே அதிகாரம் உள்ளது, கட்சியிலிருந்து அருளை அன்புமணி நீக்க முடியாது” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,  பா.ம.க., நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எம்.எல்.ஏ., அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். என் மனம் வேதனைப்படும் அளவு செய்கின்றனர். எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நான் கட்சியை வழி நடத்தி கொண்டு இருக்கிறேன். கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார். பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி பா.ம.க., மகளிர் மாநாடு நடத்துகிறோம். அ.தி.மு.க., திமுகவுடன் பா.ம.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என பரவும் தகவல் வதந்தி. பா.ம.க., செயற்குழு, பொதுக்குழு கருத்துகளை கேட்ட பிறகு தான் கூட்டணி குறித்து பதில் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார். அன்புமணி குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், ” அன்புமணி குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை” என ராமதாஸ் பதில் அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்