அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக இணையவழி எம்பிஏ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது மேலாண்மை ஆகிய 2 பாடப் பிரிவுகளில் ஆங்கில வழியில் இந்த எம்பிஏ படிப்பு வழங்கப்படுகிறது. இணையவழி எம்பிஏ படிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தொலைதூரக் கல்வி வாரியம் இரண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளன. இந்த பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கவிரும்பும் பட்டதாரிகள் . இணையவழியில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் சேர விரும்புவோர் https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதம் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.