ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர் வெளிநாட்டில் தலைமறைவு: திருச்சிக்கு விமானத்தில் வந்த போது வளைத்த போலீஸ்…!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (29). ஆன்லைன் பணமோசடி புகாரில், திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் இவரை தேடி வந்தனர். விசாரணைக்கு பயந்து ராஜதுரை மலேசியாவிற்கு தப்பிச் சென்றார். அவரை பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும், ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அளிக்கப்பட்டது. இந்நிலையில், மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராஜதுரை பாஸ்போர்ட்டுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில், அவரை மடக்கிய அதிகாரிகள் இதுகுறித்து
திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கிருந்து வந்த போலீசார், ராஜதுரையை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Comments are closed.