Rock Fort Times
Online News

ஒரு புயல் முடிவதற்குள் அடுத்த புயல்: தனது நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது…!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல்(42). இவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும், கிண்டி மடுவின்கரையில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். அந்த இளம்பெண் தனது குடும்ப தேவைக்காக சக்திவேலிடம், ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகவும்,
இதன்மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்ட சக்திவேல், இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு இளம்பெண் மறுத்த காரணத்தால் மிரட்டல் விடுத்ததுடன் தான் கடனாக கொடுத்த ரூ.2 லட்சத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை மிரட்டியது தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரது நிறுவனத்தில் பணியாற்றிய
வேறு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் கூறும்போது,‘‘நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் புகார் கொடுக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெயர் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாது’ என்றனர். அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் புயலை கிளப்பி வரும் நிலையில், அடுத்த புயலாக இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றொரு புயலை கிளப்பி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்