திருச்சி, ஏர்போர்ட் அருகே உள்ள கோவில் நிர்வாகிகள் நியமனத்தில் ஒருதலை பட்சம்: ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!
திருச்சி, ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள 45 ஆண்டுகள் பழமைவாய்ந்த அங்காள ஈஸ்வரி பீலிகான் முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் நியமனம் ஒருதலைப்பட்சமாக நடைபெற்றுள்ளதாகவும், நிர்வாகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அதில் தலையிடக்கூடாது என மிரட்டுவதாகவும், பொதுமக்களிடமிருந்து வசூல்செய்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட மண்டபத்தில் சுபநிகழ்வுகள் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் முன்னிலையில் புதிதாக கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க வலியுறுத்தியும், ஆலய பாதுகாப்பு கமிட்டி மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று(22-09-2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர் பொதுக்கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உரிமை கொண்டாட தடை விதிக்கவும், 43 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த முறையினை மாற்றாமல், தன்னிச்சையாக செயல்படும் கோவில் நிர்வாகத்தை மாற்றியமைத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
Comments are closed.