Rock Fort Times
Online News

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வி.ஏ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (55) தனது நண்பர் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரகுடி கிராமத்திற்க்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார். இருசக்கர வாகனத்தை அவரது நண்பர் குமார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது உப்பிலியபுரத்திலிருந்து தா.பேட்டை நோக்கி தனியாா்  பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த  பேருந்தை  முந்தி செல்ல குமாா் முயன்ற போது எதிர்பாராத விதமாக இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் பேருந்தில் மோதியது. இதில் ராமலிங்கம் மற்றும் குமார் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த ராமலிங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த குமார் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராமலிங்கம் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்