Rock Fort Times
Online News

ரயில்வேயில் 32 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஒரு கோடி பேர் விண்ணப்பம்…!

குரூப்-4 ரயில்வே தேர்வுக்கு சுமார் 1 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். ரயில்வே குரூப் -4 என்பது இந்திய ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான ஒரு ஆட்சேர்ப்பு செயல் முறையாகும். இது, பொதுவாக “குரூப் டி” என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 36 வயது வரை ஆகும். ரயில்வே குரூப் டி-ல் டிராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, அசிஸ்டன்ட் பாயிண்ட்ஸ்மேன் மற்றும் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் அடங்கும். குரூப் டி பதவிகளுக்கு மொத்தம் 32,438 காலியிடங்கள் இருப்பதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) அறிவித்திருந்தது. இதற்கு ஆன்லைன் பதிவு முடிவடைந்த நிலையில் சுமார் 1 கோடியே 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், மும்பையில் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்