தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!
‘பகுத்தறிவு பகலவன்’ தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மற்றும் மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியாரின் புகழ் என்றும் ஓங்கும்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.