காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலைக்கு மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜா் சிலைக்கு ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்காபட்டேல் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், மாநகராட்சி 55 மற்றும் 56 ஆகிய வார்டு தலைவர்கள் ரவிச்சந்திரன், அன்வர்பாஷா ஆகியோர் முன்னிலையில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம்கோபி மற்றும் திருவானைகோவில் தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் கங்காரு கருணை இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலை உணவும், காமராஜர் பவனில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அரசுப்பள்ளி மாணவியருக்கு நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டன. மார்க்கெட் கோட்ட தலைவர் பகதூர்ஷா முன்னிலையில் இப்ராஹிம் பார்க் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன . அரியமங்கலம் கோட்டதலைவர் அழகர் முன்னிலையில் அரியமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு எழுதுகோல், திருச்சி மாவட்ட செயலாளர் ஹக்கீம் முன்னிலையில் உப்புப்பாறை பகுதி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. சுப்ரமணியபுரம் கோட்டத்தலைவர் எட்வின் முன்னிலையில் சுப்ரமணியபுரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய் படேல், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.படேல், பொன் தமிழரசன், பாதயாத்திரை நடராஜன், பூக்கடை பன்னீர், ராஜா, உறந்தை செல்வம், சர்புதீன், கோட்டத்தலைவர்கள் மணிவேல், பஜார் மொய்தீன், அருள், அண்ணாதுரை, கலியபெருமாள், ஷீலா செலஸ், அஞ்சு, கிளமெண்ட், காதர், நரேன், தினேஷ், மகேஷ், அரிசிக்கடை டேவிட், வீரமணி, வார்டு தலைவர்கள் ஹீரா, ஆரிப், காமராஜ், மதிவாணன், கண்ணன், இந்திரா, பாண்டியன், நூர் அஹமது, பெரியசாமி, அமீனுதீன், மும்தாஜ், சுல்தான் பாட்ஷா, இம்தியாஸ், நிஜாம், சலீம், லட்சுமி, அஞ்சலிதேவி, அபுதாஹிர், சரவணன், பரமசிவம், அஹமதுல்லா, சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.