ஜெயலலிதா நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏழை மாணவிகள் 50 பேருக்கு வைப்பு தொகை திட்டம்- மாநகர செயலாளர் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்…!
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 8-ம்ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எடத் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில், ஏழை- எளிய மாணவிகள் 50 பேருக்கு வைப்பு தொகை வழங்கும் திட்டத்தின் துவக்க விழா இன்று(11-12-2024) நடைபெற்றது. விழாவிற்கு, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி ஏழை, எளிய மாணவிகள் 50 பெருக்கு வைப்புத் தொகை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஜோதிவாணன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் ரோஜர், அன்பழகன், கலைவாணன், அணிச் செயலாளர்கள் வெங்கட்பிரபு, பாலாஜி, வட்டச் செயலாளர்கள் வி.கே.கண்ணன், நத்தர்ஷா, டைமண்ட் தாமோதரன், பொன்.அகிலாண்டம், நார்த்தாமலை செந்தில், தர்கா முஸ்தபா, வழக்கறிஞர் கௌசல்யா, கருமண்டபம் சுரேந்தர், சேதுராமன், டி.கே.ராமன், கார்த்திக், கமல்நாதன், ஐடி விங் கதிரவன், நாகராஜ், சக்தி, வாழைக்காய் மண்டி சுரேஷ், தர்மர், செல்வராஜ், அசோக், பார்த்திபன், ராஜகோபாலன், நடராஜன், கிருஷ்ணன், சந்தோஷ், உறையூர் பிரபு, புத்தூர் ரமேஷ், ஆனியன் கணேசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.