ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை…!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் . அருகே உள்ள எம்ஜிஆர் சிலை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், ஐடி பிரிவு செயலாளர் வெங்கட்பிரபு, சிறுபான்மை பிரிவு அப்பாஸ், கலை இலக்கியப் பிரிவு ஜான் எட்வர்டு குமார், இளைஞர் பாசறை செயலாளர் லோகநாதன், பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர், எனர்ஜி அப்துல் ரகுமான், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, அன்பழகன், ரோஜர், வாசுதேவன், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணைத்தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அப்பாகுட்டி, டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், சுரேஷ் குப்தா, தீபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.