Rock Fort Times
Online News

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று(பிப்.20) உலக தாய்மொழி தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் இராமநாதன்( பணியாளர் மற்றும் சட்டம்) ,சுரேஷ்குமார் (வணிகம்), புகழேந்தி ராஜ் (தொழில்நுட்பம் ) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்