Rock Fort Times
Online News

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம்: 27-வது வார்டில் மேயர் மு.அன்பழகன் பங்கேற்பு…!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் 65 வார்டுகளில் இன்று (10-12-2024) பகுதி சபா கூட்டம் நடந்தது.
மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்குட்பட்ட 27-வது வார்டு சங்கீதபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சங்கீதபுரம், ஆட்டுமந்தை தெரு , சவேரியார் கோவில் தெரு, மீன்கார தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை, பெருமாள்கோவில் தெரு, ஜெனரல் பஜார், பென்சனர் தெரு, விஸ்வப்ப நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம், மூலைக்கொல்லை தெரு, தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார் . முன்னதாக மேயர் மு.அன்பழகன், 27- வது வார்டு பகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். இதேபோல மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். முன்னதாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி மேயர் தலைமையில், ஆணையர் சரவணன், துணை ஆணையர் பாலு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்