அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா- 30-ந் தேதி நடக்கிறது…!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வருகிற 30-12-2024( திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் பொன்மாரிமுத்து கூறுகையில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கல்லுக்குழி அஞ்சநேயசுவாமி திருக்கோயிலில் 30-12-2024 -ம் தேதி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றுதல் விழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். காலை 7 மணிக்கு வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் திருவீதி உலா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஜெயந்தி விழா பிரசாதம் வழங்கப்படும். நண்பகல் சிறப்பு அன்னதானம் நடைபெறும். இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். 27 வடையுடன் மாலை ரூ.75, 54 வடையுடன் மாலை ரூ.150, 108 வடையுடன் மாலை ரூ.300, 504 வடையுடன் மாலை ரூ.1,500, 1008 வடையுடன் மாலை ரூ. 3 ஆயிரம், 5004 வடையுடன் மாலை ரூ.15 ஆயிரம், 10,008 வடையுடன் மாலை ரூ.30 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடை மாலை சாற்று விழாவில் பங்கேற்கும் நபர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர் ம.லட்சுமணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, கோயில் செயல் அலுவலர் பொன்மாரிமுத்து, தக்கார் தி.சுந்தரி, திருக்கோயில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.