மகாத்மா காந்தியின் பிறந்தநாளை( அக்.2) நினைவு கூறும் வகையில், திருச்சி விமான நிலைய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் இன்று திருச்சி கே.கே.நகர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூங்காவில் ஸ்வச்சதா ஹி சேவா திட்டத்தின் கீழ் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ‘தூய்மையான இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை நாடு தழுவிய தூய்மை இந்தியா இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த தேசப்பிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த முகாம் நடத்தப்பட்டது. திருச்சி சிஐஎஸ்எஃப் பிரிவின் துணைத் தளபதி திலீப் நம்பூதிரி மேற்பார்வையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed.