துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில் 32- வது வார்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…!
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், 32- வது வட்ட திமுக சார்பாக கழக கொடிஏற்றி இனிப்பு மற்றும் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாலக்கரை பகுதியில் இன்று(27-11-2025) நடைபெற்றது. வட்ட கழக செயலாளர் என்.தனக்கோடி, தலைமை பகுதி கழக செயலாளர் டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் நவல்பட்டு கே.சண்முகம் மற்றும் நா.செந்தமிழ் செல்வன் ஆகியோர் கழகக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில், வட்ட கழக பிரதிநிதிகள் கே.மோகன், கே.தயாநிதி, எஸ்.நடராஜன், சி.செல்வம், அ.பிச்சைமுத்து , அவைத்தலைவர் டி.பால்ராஜ், துணை செயலாளர்கள் ஜி.சீனிவாசன், என்.நாகலட்சுமி, ஐ.ஏசுதாஸ், டி.கமலக்கண்ணன், அணி நிர்வாகிகள் ஆர்.சுகுமார், ஆர்.தாமோதரன், ஐ.ஜமான், எஸ்.சுகுமார், ஆர்.நாகராஜன், பி.ரெங்கி, எம்.முத்துக்குமார், கே.விஜயகோபால், பி .செந்தாமரை கண்ணன், சங்கர்பாபு, ஜோசப், சரவணன்,சுரேந்தர், ரெங்கு, ஜீவா மற்றும் மகளிர் அணியினர், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Comments are closed.