முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1-ம் தேதி திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் கழகக் கொடியேற்று விழா!* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மார்ச் 1-ம் தேதி கழகத் தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் மார்ச் 1ம் தேதி கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள், மரக்கன்று நடுதல், ரத்ததானம் செய்தல் என பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாதம் முழுவதும் எழுச்சியாக கொண்டாடுவோம்.
மாவட்ட கழகத்தின் சார்பாக பிரதிநிதிகள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிட எதுவாக அவர்களின் வருகையை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டு கொள்கின்றேன்.இந்த நிகழ்வில் மாநில,மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.