திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு நாளை மாலை அணிவித்து மரியாதை…!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு நாளை (23-05-2024) காலை 10 மணிக்கு கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையிலும், எஸ். இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம்.சபியுல்லா, மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக கழகச் செயலாளர் – நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.