ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்றும் அக்.1(புதன்கிழமை) அக்.2(வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாட்கள் ஆகும். அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாகும். இடைப்பட்ட வெள்ளிக்கிழமையையும் விடுமுறை நாளாக அறிவித்தால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றும், பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமையும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு
அரசின் உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, அக்.3-ம் தேதி பொதுவிடுமுறை என வரும் தகவல்கள் வதந்தி என தெரிவித்துள்ளது.

Comments are closed.