ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்டோபர் 1ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, அக்டோபர் 2ம் தேதி (வியாழன்) விஜயதசமி ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4, 5ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறையாக வரும் நிலையில், இடையில் உள்ள அக்டோபர் 3ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது அரசு பரிசீலனை செய்து வருகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் மொத்தம் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கனவே தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.