Rock Fort Times
Online News

இனி வீடுகளையும் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி வாங்கலாம்..!- திருச்சி கே.கே.நகரில் மாடல் ஹவுஸை திறந்தது ஜெயம் பில்டர்ஸ்…

திருச்சி,கே.கே.நகர் பாண்டியன் சாலையில் ” ஜெயம் எம்பயர் ” என்கிற அப்பார்ட்மெண்டை கட்டி வருகிறது ஜெயம் பில்டர்ஸ். தலைநகர் சென்னைக்கு இணையாக கிளப் ஹவுஸ், இன்டோர் ஸ்விம்மிங் ஃபுல், மினி தியேட்டர், யோகா மையம், சூப்பர் மார்க்கெட், கம்யூனிட்டி ஹால் போன்ற பல்வேறு வசதிகளுடன் மொத்தம் 175 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், மாதிரி வீடுகள் மற்றும் க்ளப் ஹவுஸ் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று ( ஜூன்.14 )நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் ஆனந்த், நிர்வாக பங்குதாரர்கள் ஜெயராணி ஆனந்த் மற்றும் சஞ்சய் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.ஜி.எம். அதுல் பிரியதர்ஷன் ரிப்பன் வெட்டி மாடல் கிளப் ஹவுஸை திறந்து வைத்தார். எஸ்.பி.ஐ வங்கியின் மண்டல மேலாளர் வேலப்பன், சரவணா எலெக்ட்ரிக்கல்ஸ் சரவணன், விக்னேஷ் குரூப்ஸ் கோபிநாத், டாக்டர்கள் வேல்முருகன், உமா வேல்முருகன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். ஜெயம் எம்பயர் அப்பார்ட்மெண்டில் செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ஜெயம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கூறும்போது.,


தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இணையான அனைத்து உலக தர வசதிகளுடன் ஒரு அப்பார்ட்மெண்ட் கட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் திருச்சி கே.கே.நகர் பாண்டியன் சாலையில் உள்ள ஜெயம் எம்பயர். அப்பார்ட்மெண்ட் வீடுகளாக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று பக்கங்களிலும் தனித்தனி சுவர்களுடன் கட்டப்பட்டுள்ளது. எதிர்கால திட்டமிடல்களுடன் கட்டப்பட்டுள்ள ஜெயம் எம்பயரில் ஒவ்வொரு வீட்டிற்கான பார்க்கிங் ஏரியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய வசதியாக சார்ஜிங் பாயிண்டுகள் நிறுவப்பட்டுள்ளது. பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ள ரெஸ்டாரண்டில் மூன்று வேளையும் சுவையான உணவு வகைகள் தயாரிக்கப்படும். இன்று ஜெயம் எம்பயரில் 4 மாடல் வீடுகள் திறக்கப்பட்டுள்ளன. இவை 4 தனித்தனி ஆர்க்கிடெக்டுகள் மூலம் பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டவை. இவற்றை வாடிக்கையாளர்கள் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் செய்து அவர்கள் விரும்பியபடி தங்களுக்கான வீடுகளை டிசைன் செய்து கொள்ளலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் சாமி பில்டர்ஸ் இளமுருகு, ஆர்க்கிடெக்ட் ஜனார்த்தனன், இன்ஜினியர்கள் ராமசாமி, பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நூர்முகமது, விசாலா ஏஜென்சீஸ் ஆனந்த், இந்தர் எலெக்ட்ரிகல்ஸ் அசோக் மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்