Rock Fort Times
Online News

வேட்பு மனுக்கள் ஏற்பு: சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது உறுதியானது…!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், ஒரு தொகுதியில் குற்ற வழக்கை குறிப்பிடாமலும், மற்றொரு தொகுதியில் குறிப்பிட்டும் இருந்தார். மேலும், ஒரு தொகுதியில் தன்னுடைய வயது 51 என்றும், மற்றொரு
தொகுதியில் 52 என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற ஐயப்பாடு ஏற்பட்டது. இதனை விஜய் சரி செய்து மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று(07-04-2026) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரம்பூரில் விஜயின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு பரிசீலனை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர், மின் சப்ளை வந்ததும் மனுக்கள் பரிசீலனை தொடங்கின. அப்போது விஜயின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்