தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும், இதன்மூலம் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதுதான். அனைவரும் மீண்டும் ஒன்றிணைவது ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய என்னிடம் யாரும் பேசவில்லை. கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை” என்றார்.

Comments are closed.