Rock Fort Times
Online News

12 ஆண்டுகளாக வேலையில்லை: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப கோரிக்கை…!

இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த 21.07.2024 ஆம் தேதி அன்று நியமன தேர்வின்போது 2768 காலிபணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஆனால் 2013 முதல் இன்று வரை 12 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் 15,000-க்கும் மேல் உள்ள நிலையில், கூடுதல் நியமன பணியிடங்களை அதிகரித்து முழுமையாக நிரப்ப வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை தமிழ்நாடு அரசு எங்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போராட்டங்கள் நடத்தியும் தமிழ்நாடு அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 12 ஆண்டுகளாக போராடிவரும் எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்