Rock Fort Times
Online News

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: இனி தானாகவே அடுத்தடுத்த ‘ரீல்ஸ்’ ஓடும்…!

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளம் தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. முதலில் போட்டோக்கள் மட்டும் பதிவிடும் வகையில் இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வந்தது. பிறகு நாளடைவில் புதுப்புது அப்டேட்கள் வெளியிடப்பட்டன. தற்போது ரீல்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, ஆட்டோ ரீல்ஸ் என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளது. இனி பயனர்கள் ரீல்ஸைப் பார்க்க ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அம்சம் முதலில் சில பீட்டா பயனர்களுக்கு. ரீல்ஸ் பட்டனை கிளிக் செய்து ஆட்டோ ரீல்ஸ் ஆன் செய்தால் தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ்கள் ஓட தொடங்கும். பிற வேலைகளைச் செய்துகொண்டே இன்ஸ்டாகிராம் பார்ப்பவர்களுக்கு இந்த ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு வருகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் எனத்தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்