Rock Fort Times
Online News

மண்வளத்தை காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம்- உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு…!

தமிழ்நாடு விவசாய பட்ஜெட்டில் தகவல்

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று(20-02-2024) தாக்கல் செய்தார்.

விவசாய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:

2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப் படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும். மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப் பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவைதவிர மேலும் பல சிறப்பம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்