திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் புதிய நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தொகுதி மேம்பாட்டு நிதி 2025–2026-ன் கீழ் பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(27-01-2026) திறந்து வைத்தார். அதன்படி, நவல்பட்டு ஊராட்சி, சிலோன் குடியிருப்பு பகுதியில் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையை அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், அசூர் ஊராட்சி – பொய்கைக்குடி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்து மழலையருக்கு இனிப்பு வழங்கினார். இதேபோல கீழக்குறிச்சி ஊராட்சி தென்றல் நகரில், ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Comments are closed.