
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 33க்கு உட்பட்ட ஆட்டுக்கார தெருவில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
அதற்கான திறப்பு விழா நேற்று (24-11-2023) நடைபெற்றது. புதிய ரேஷன் கடையை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஜெய நிர்மலா, உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம், இளநிலை பொறியாளர் ராஜா, சுந்தர்ராஜ் , வட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் அலெக்ஸ் ராஜா, பிரதிநிதி குமார், செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டுறவு அலுவலர்கள் , மாநகராட்சி பணியாளர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.