Rock Fort Times
Online News

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் புதிய முதல்வர் பொறுப்பேற்பு…!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் (தன்னாட்சி) புதிய முதல்வராக முனைவர் து.இ.ஜார்ஜ் அமலரத்தினம் நியமிக் கப்பட்டுள்ளார். இவர், இதே கல்லூரியில் கடந்த 36 ஆண்டுகளாக கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதையடுத்து புதிய முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினத்திற்கு கல்லூரியின் செயலரும், தாளாளருமான டாக்டர் ஏ.கே. காஜாநஜீமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஜமால் முகமது, உதவி செயலர் முனைவர் கே.அப்துஸ்சமது, கவுரவ இயக்குனர் முனைவர் கே.என்.அப்துல்காதர் நிஹால், விடுதி இயக்குனர் முனைவர் முகமதுபாஜில் மற்றும் நிர்வாக குழுவினர், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற் றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்