Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். மேலும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இரவில் கோவில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த மாத அமாவாசை வருகிற 12 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு தொடங்கி மறுநாள் 13ந்தேதி ( திங்கட்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்யலாம் என கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்