Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள்:* அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையுடன் கூடிய கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் தணிப்பு சேவை மையம், இரண்டு ஊடுகதிர் கருவிகள், நவீன சலவையகம் மற்றும் சூரிய மின் உற்பத்தி கருவி ஆகியவற்றின் சேவைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று( ஜன. 7) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், கி.ஆ.பெ.மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மரு.அருண்குமார் மற்றும், மருத்துவர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்