Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை – 13-ம் தேதி முதல் தொடக்கம்…

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, மஸ்கட், ஓமன், துபாய், சிங்கப்பூர், பக்ரைன், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புதுடெல்லி உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வருகிற 13-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் திருச்சியில் இருந்து பெங்களூ ருக்கு 3 விமான சேவை உள்ள நிலையில் தற்போது 4-வது சேவையாக வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த சேவையை வழங்க இருப்பதாக தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்