Rock Fort Times
Online News

உத்தமர்கோவிலில் புதியதேர் வெள்ளோட்டம் !

மண்ணச்சநல்லூர் நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருகோவிலில் புருஷோத்தம பெருமாளுக்கு சித்திரை பெருந்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மே 4 திருதேரோட்டம் நடைபெற்றது.


மேலும் உத்தமர்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனைத்தொடர்ந்து கோவிந்தா… கோவிந்தா… என்று முழக்கங்களுடன் ஏராளமான பக்தர்கள் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்து இழுத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்