அரியலூரில் ரூ.11.58 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
அரியலூரில் ரூ.11.58 கோடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று( மார்ச் 7) திறந்து வைத்தார். அதேபோல, புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பேருந்து சேவையையும் அமைச்சர்கள் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விழாவில், கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். பயணிகளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.