Rock Fort Times
Online News

லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.52 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்… திமுக எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ அ. சௌந்தரபாண்டியன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.52 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் லால்குடி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் ஜி.சி. கோபிநாத், மருத்துவ அலுவலர் சங்கரி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவசங்கரி, கவுன்சிலர்கள் மங்களம், செல்வகுமார், செந்தில், மணி, முருகன், இளவரசன், கோவிந்தன், இளங்கோவன், பெரியசாமி, வினோத் ஆகியோர் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்