தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி உள்ளன. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் கூட்டணி பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாரதிய ஜனதாவும் இரு வேறு துருவங்களாக இருந்த நிலையில் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(25-11-2025) டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.