Rock Fort Times
Online News

ஜூலை 9-ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: வங்கி ஊழியர்களும் பங்கேற்பு…!

ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத் துறையும், வேலை நிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. வங்கி மற்றும் பிற நிதித் துறைகளில் வேலைநிறுத்தம் முழுமையாக இருக்கும். மத்திய அரசின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து அனைத்துத் தொழில்களிலும் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்