திருச்சி, திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்றவர் கைது! 750 போதை மாத்திரைகளை கைப்பற்றி தனிப்படை போலீசார்!
திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அண்ணா நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, திருச்சி எஸ்.பி.தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர்.அப்போது, திருச்சி அரியமங்கலம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் நஸ்ருதீன் (24) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்தார். இதைக்கண்ட தனிப்படை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 எம்.ஜி அளவு கொண்ட டெபென்டால் என்ற 750போதை மாத்திரைகளையும் போதையும் ஊசி போட்டுக் கொள்வதற்கான 5 சிரஞ்சீகளையும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்புரூபாய் 26 ஆயிரத்து 250 ஆகும். பின்னர் நசுருதனை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நசுருதீன் மீது கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் போதை மாத்திரை விற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Comments are closed.